தனக்கன்குளம் ஊராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர் திமுக கிளை சார்பாக கொரோனா நிவாரண பொருட்கள் வீடு வீடாக விநியோகம்
" alt="" aria-hidden="true" />
கொரோனா தொற்று காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததன் பெயரில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திமுக கிளை சார்பாக 18-4-2020 இன்று வீடு வீடாக சென்று மக்களுக்கு அரிசி காய்கறி மற்றும் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள். கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் யாரும் நிவாரணப் பொருள்களை வாங்க வெளியே வரவேண்டாம் எனவும் திமுக கிளை சார்பாக வீடு வீடாக ஊராட்சி மன்றதலைவர் திருமதி ஆனந்தி பாண்டிமோகன்
துணைத் தலைவர் செல்வகுமார்
செயலாளர் பாண்டி
பேச்சாளர் பால்பாண்டி
ஒன்றியம் திருமதி சுமதி செல்வம்
11வது வார்டு கவுன்சிலர திருமதி குணசுதா12 வது வார்டுகவுன்சிலர் தன்ராஜ்
இணைந்து அனைவரின் வீட்டிற்கே வந்து நிவாரணப் பொருள்களை வழங்குவதாக நேதாஜி நகர் மக்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் ஊர் மக்கள் அனைவரும் வெளியே வராமல் அவரவர் வீட்டிலேயே இருந்தனர். தனக்கன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் படி முககவசம் அணிந்து திமுக கிளை சார்பில் வீடு வீடாக சென்று மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.