தேனி மாவட்டம் தேனியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ்
" alt="" aria-hidden="true" />
டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தேனி மாவட்டத்தில் 41 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் குணமடைந்தவர்கள் 18 பேர் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக குறைந்தது..
இந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய தேனி அல்லிநகரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 35 வயதுடைய அவர் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிகிச்சையில் உள்ளவரின் மனைவி 40 வயது மனைவிக்கும் கொரோனா வைரஸ் உறுதியானது.
இவர்கள் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது
மேலும் 100 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.
இதனால் இந்த சம்பவம் தொடர்ந்து தேனியில் மேலும் அதிகரிக்கக்கூடுமோ என்று அதிர்ச்சியில் உள்ளனர்