வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை

" alt="" aria-hidden="true" />


படப்பை,


 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 வழி சாலைகளில் முக்கிய சாலையாக வண்டலூர்- வாலாஜாபாத் சாலை உள்ளது. படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சாலைப்பணிகள் முழுமையாக நிறைவடையாமலும உள்ளது.


மேலும் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கத்திற்காக சாலையோரங்களில் இருபுறமும் பசுமையாக இருந்த மரங்களை வேரோடு அகற்றி சாலை விரிவாக்கப்பணிகளை நெடுஞ்சாலை துறையினர் தொடங்கினர்.





சாலைப் பணிகள் பல பகுதிகளில் முடிந்திருந்தும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படாத நிலையே உள்ளது.





தற்போது கோடை காலம் என்பதால் அனல் பறக்கும் வெயில் வீசுவதால் வாகனங்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்லும் பொதுமக்கள் உள்பட அனைவரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலையில் நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் வெயிலில் சிரமப்பட்டு கடும் அவதிக்குள்ளாகி சாலையோரம் ஒதுங்கி நிற்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திக்குள்ளாகின்றனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:-

பல ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களில் இருந்த மரங்களை சாலை விரிவாக்கம் செய்தபோது அகற்றினர். ஆனால் சாலைவிரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் முடிந்த பகுதிகளிலும் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்படாமல் உள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது . எனவே சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.